/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக்குகள் திருட்டு இருவர் கைது
/
பைக்குகள் திருட்டு இருவர் கைது
ADDED : அக் 26, 2025 10:25 PM
போத்தனூர்: வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள, ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கிஷோர்குமார். கடந்த, 24ம் தேதி இரவு, இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பைக் மாயமாகியிருந்தது.
சுற்றுப்பகுதியில் பைக்கை தேடி சென்றார். அப்போது அபுதாகீர் என்பவரும் தனது பைக்கை காணாமல் தேடி வந்தார். இருவரும் சேர்ந்து தேடியபோது, மர்ம நபர்கள் இருவர், பைக்குகளை தள்ளிச் செல்வதை கண்டனர். அவர்களை பிடித்து, பைக்குகளுடன் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் கருமத்தம்பட்டி, பாரதி நகரை சேர்ந்த சதீஷ், 23, ஓம் சக்தி கோயில் எதிரே வசிக்கும் பிஜோ வில்லியம்ஸ், 23 என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

