/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெண் பன்றிகள் திருட்டு; கோவையில் இருவர் கைது
/
வெண் பன்றிகள் திருட்டு; கோவையில் இருவர் கைது
ADDED : ஆக 21, 2025 07:10 AM
போத்தனுார்; கோவையில், வெண் பன்றிகளை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சுண்டக்காமுத்தூர், கோ-ஆபரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 25, கோவைப்புதுாரில் தனியார் கல்லுாரி பின்புறம் வெண் பன்றிகள் வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். 4ம் தேதி காலை, 33 பன்றிகள் திருடு போயிருந்தன. அதன் மதிப்பு ரூ.3.3 லட்சம்.
குனியமுத்துார் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசி டிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நள்ளிரவு நேரத்தில் இருவர் வாகனத்தில் வந்து, பன்றிகளை திருடிச் செல்வது தெரிந்தது. அதன்தொடர்ச்சியான பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு செல்லப்பட்டதும், சம்பவத்தில் ஈடுபட்டது, ராமச்சந்திரனிடம் விற்பனைக்காக பன்றி வாங்கிச் செல்லும், சூலுாரைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ஹரிராம், 19 என்பதும் தெரிந்தது.
அவ்விருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், பன்றிகளை வளர்த்து, விற்க முடிவு செய்தது தெரியவந்தது. கேரளாவில் இருந்த, 33 பன்றிகளையும் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

