/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பனை கிணற்றில் வீசிய இருவர் கைது
/
நண்பனை கிணற்றில் வீசிய இருவர் கைது
ADDED : ஆக 08, 2025 07:12 AM
கோவை; கோவை மலுமிச்சம்பட்டியிலிருந்து ஒக்கிலிபாளையம் செல்லும் வழியில் தனியாருக்கு செந்தமான குதிரை பண்ணை உள்ளது. இங்குள்ள கோழிபண்ணையில் பாலமுருகன், 48 காவலாளியாக பணி புரிகிறார். இவர் குற்ற வழக்கு ஒன்றில் பாளையம்கோட்டை சிறையில் இருந்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த முருகபெருமாள், 25 என்பவர் பழக்கமானார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் முருகபெருமாள், பாலமுருகனை தொடர்புகொண்டு தனக்கும், தனது நண்பரான ஜெயராம், 24 என்பவருக்கும் வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். பாலமுருகன் இருவரையும் கோவைக்கு வருமாறு கூறியுள்ளார்.
கோவை வந்த இருவருடன் பாலமுருகன் சம்பவத்தன்று இரவு மது குடித்துள்ளார். அப்போது முருகபெருமாள், ஜெயராம் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயராமின் மண்டையில் கட்டையால் முருகபெருமாள் தாக்கியதில், ஜெயராம் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த இருவரும் ஜெயராமின் உடலில் கல்லை கட்டி, அருகேயிருந்த கிணற்றினுள் போட்டுவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த பாலமுருகன், முருகபெருமாள் ஆகியோர் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சரணடைந்து சம்பவம் குறித்து கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள் ளனர்.