/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியிடம் பணம் பறிப்பு: போக்சோவில் இருவர் கைது
/
மாணவியிடம் பணம் பறிப்பு: போக்சோவில் இருவர் கைது
ADDED : மார் 01, 2024 11:28 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் பறித்த இரு வாலிபர்களை, போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த, 10ம் வகுப்பு பயிலும் மாணவியுடன், அசாருதீன், 19, என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது, அந்த வாலிபர், மாணவியை மிரட்டி பணம் பெற்று வந்தார். பணம் கொடுக்கவிட்டால், முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என, அசாருதீன் மிரட்டியதாக தெரிகிறது. அதே போன்று, அவரது நண்பரான ஆகாஷ்,21, என்பவரும் மாணவியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி மேற்கு போலீசார், போக்சோ பிரிவில் அசாருதீன், ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

