ADDED : ஏப் 03, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பங்களாமேட்டை சேர்ந்தவர் ருத்ரேஷ், 29. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன், காரமடை தோலம்பாளையம் சாலையில் உள்ள, மதுபான பாரில் மது அருந்தினார். போதையில் வெளியே வந்து, அமர்ந்து மது அருந்தினர்.
இதை அங்கிருந்த பார் ஊழியர்கள் திருநாவுக்கரசு, 29, காளியப்பன் ,30, ஆகியோர் கண்டித்தனர்.
இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.
பார் ஊழியர்கள் திருநாவுக்கரசு மற்றும் காளியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து ருத்ரேஷை தாக்கினர்.
அவர் அளித்த புகாரின்பேரில், காரமடை போலீசார் வழக்குப் பதிந்து பார் ஊழியர்கள் திருநாவுக்கரசு மற்றும் காளியப்பனை கைது செய்தனர்.---

