/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆண்டு விழாவில் இரு நுால்கள் வெளியீடு
/
பள்ளி ஆண்டு விழாவில் இரு நுால்கள் வெளியீடு
ADDED : ஜன 16, 2025 05:58 AM

ஆனைமலை : ஆனைமலை, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியின், 59வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் செயலர் ரங்கசாமி வரவேற்றார். கல்விக்கழகத்தின் உபதலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி பேசினார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா, 'வாசிப்பை நேசிப்போம்' என்ற தலைப்பில் பேசினார்.
மேலும், மாணவர்களிடைய நடந்த கலந்துரையாடலில், புத்தகங்கள் குறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. வளம் தரும் குறள் நுாறு என்ற திருக்குறள் விளக்கவுரை நுாலும், பள்ளி மாணவர் எழுதிய தாகம் தீர்க்கும் மழை என்ற கவிதை நுாலும் வெளியிடப்பட்டது. இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக்கழக உறுப்பினர்கள் ஆனந்தகுமார், அருள் செந்தில்குமார், டாக்டர் ரவிச்சந்திரன் துரைராம் ஆகியோர் பரிசு வழங்கினர்.
மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தமிழாசிரியர் செந்தில்குமார் கூறுகையில், 'திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களை படிக்க முடியாதவர்களும் அவசர உலகத்தில் பரபரப்பாக வாழும் மனிதர்களுக்கும் திருக்குறள் சென்று சேரும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நுாறு திருக்குறளுக்கு விளக்கம் எழுதி, வளம் தரும் குறள் நுாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. மாணவன் நருன் எழுதிய, தாகம் தீர்க்கும் மழை என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது,'' என்றார்.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழாசிரியர் கதிர்காமம் நன்றி கூறினார்.