தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

 குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

 குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி


ADDED : மார் 27, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: கோவை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் டி.வி.கே.நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சுஜித் குமார்,11- யுவராஜ் மகன் பிரதோஷ், 11. இருவரும், காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலை, பள்ளியில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், இரு சிறுவர்களும் காலையில் தங்களது வீட்டில் இருந்துள்ளனர்.

காலை உணவு சாப்பிட்டு விட்டு, விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, இருவரும் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளனர்.

மதியம், 1:00 மணி ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

அப்போது கண்ணம்பாளையம் குளத்தில் சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக தகவல் வெளியானது. சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சிறுவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us