தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவுப்பொருள் சேகரிப்புக்கு இரு நாட்கள் சிறப்பு முகாம்

கழிவுப்பொருள் சேகரிப்புக்கு இரு நாட்கள் சிறப்பு முகாம்

கழிவுப்பொருள் சேகரிப்புக்கு இரு நாட்கள் சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 27, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; பெரிய அளவிலான கழிவுப் பொருட்களை, இரு நாள் சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து, பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு, மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகாரமாகிறது. வீடுதோறும் சென்று துாய்மை பணியாளர்கள் குப்பையை தரம் பிரித்து சேகரித்துவருகின்றனர்.

இருப்பினும், பொது இடங்களில் குப்பையை வீசி செல்வது இன்றும் தொடர்கதையாக உள்ளது. பழைய படுக்கைகள், மேஜை உள்ளிட்ட பெரிய கழிவுப்பொருட்களை காலியிடங்கள், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பொது மக்கள் வீசிசெல்கின்றனர்.

இதனால், நீர் நிலைகள் மாசுபடுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பழைய மெத்தைகளை பொது இடங்களில் வீசுவதாலும், அவற்றுக்கு தீ வைப்பதாலும், காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

இந்நிலையில், பழைய படுக்கைகள், சோபாக்கள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பெரிய வீட்டு கழிவுப்பொருட்களை முறையாக அகற்ற ஏதுவாக, மாநகராட்சி சார்பில் ஆக., 2, 3ம் தேதிகளில் சிறப்பு சேகரிப்பு முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, மக்கள் பொது இடங்களில் இக்கழிவுகளை வீசாமல், முகாமில் வழங்க மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இரு தினங்களும், வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள், கழிவு சேகரிப்பு மையங்களாக செயல்படும். இதுதொடர்பாக, மாநகராட்சி வடக்கு மண்டலத்தை, 89259 75980, மேற்கு மண்டலத்தை, 89259 75981, மத்திய மண்டலத்தை, 89259 75982, தெற்கு மண்டலத்தை, 90430 66114, கிழக்கு மண்டலத்தை, 89258 40945 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us