தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்துக்குள்ளான திருட்டு பைக் வசமாக சிக்கிக்கொண்ட இருவர்

விபத்துக்குள்ளான திருட்டு பைக் வசமாக சிக்கிக்கொண்ட இருவர்

விபத்துக்குள்ளான திருட்டு பைக் வசமாக சிக்கிக்கொண்ட இருவர்


UPDATED : நவ 25, 2026 07:32 PM

ADDED : நவ 25, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:32 PM ADDED : நவ 25, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, புளியம்பட்டி பெரியார் நகரை சேர்ந்த அபினேஷ்,24, என்பவர், தனது பைக் திருட்டு போனதாக, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மலுமிச்சம்பட்டியில் தடுப்பில் பைக் விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த இருவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மேல்அனுப்பநாடு பகுதியை சேர்ந்த நவீன்ராஜ், 22, சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த தீபன்குமார், 22 ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் நவீன்ராஜ் மீது, கொலை, கஞ்சா வழக்கும், தீபன்குமார் மீது திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஒரு பைக்கில் இருவரும் வந்து, புளியம்பட்டியில் பைக் திருடி கொண்டு, மலுமிச்சம்பட்டி வழியாக சென்று உள்ளனர்.

திருட்டு பைக்கை நவீன்ராஜ் ஓட்டி சென்றார். மற்றொரு பைக்கில் தீபன்குமார் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் தீபன்குமார் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us