/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரேன் மீது கார் மோதி இருவர் காயம்
/
கிரேன் மீது கார் மோதி இருவர் காயம்
ADDED : டிச 14, 2025 08:00 AM

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராக்கிபாளையம், மாருதி நகரில் வசிப்பவர் விஜய் துரை, 28; கிரேன் ஆபரேட்டர்.
இவர் கிரேன் வண்டியை கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் தெற்கு பாளையம் பிரிவு அருகே ஓட்டி வந்தார்.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த சென்டர் டிவைடர் மீது மோதி, கிரேன் மீது மோதியது.
இதில், கிரேனின் முன்பக்கமும், காரின் முன் பக்கமும் சேதமடைந்தது. காரில் வந்த நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த பட்டாபிராமன்,62, அவரது மனைவி லட்சுமி,56, ஆகியோருக்கு கால், நெஞ்சு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

