/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன விபத்தில் இருவர் படுகாயம்
/
வாகன விபத்தில் இருவர் படுகாயம்
ADDED : செப் 19, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
பல்லடத்தை சேர்ந்தவர் அஸ்வின், 18. இவர் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் சென்றார். தாமரைக்குளம் பகுதியில், அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம், 52, மற்றும் விஷ்ணு, 18, ஆகியோர் ரோட்டை கடந்தனர்.
அப்போது, அஸ்வின் ஓட்டிய பைக், இவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், படுகாயமடைந்த ராமலிங்கம் கோவை அரசு மருத்துவமனையிலும், விஷ்ணு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.