/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பு சுவரில் மோதிய கார் கோவை அருகே இருவர் பலி
/
தடுப்பு சுவரில் மோதிய கார் கோவை அருகே இருவர் பலி
ADDED : ஜூன் 01, 2025 11:28 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சாலை தடுப்புச் சுவரில் ஒரு கார் மோதியதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மூன்று பேர் காயம் அடைந்தனர்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, 42, மதன்குமார், 41, தினேஷ்குமார், 38, மாணிக்கம், 36, மோகன், 40. இவர்கள் ஐந்து பேரும் ஆட்டோ டிரைவர்கள்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் இருந்து காரில் ஊட்டி புறப்பட்டுச் சென்றனர். காரமடை மேம்பாலம் அருகே கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுப்புற தடுப்பு சுவரில் மோதியது.
இதில், காரில் இருந்த ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தி, மதன்குமார் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காரமடை போலீசார், இருவர் உடலைகளையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.