/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் இருவர் பலி
/
இருவேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் இருவர் பலி
ADDED : டிச 18, 2024 10:51 PM
கோவை; கோவை மாநகர பகுதிகளில், இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்த பழனிசாமி, 42 தனது இரு சக்கர வாகனத்தில் வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, தடுமாறி சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
*தென்னம்பாளையத்தை சேர்ந்த கண்ணம்மாள், 65 திருச்சி சாலை, சிங்காநல்லுாரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம், அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவங்கள் குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

