UPDATED : அக் 11, 2026 05:45 PM
ADDED : அக் 11, 2026 05:16 PM
குறிச்சி: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை, குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே பைக்கில் சென்ற இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ரோட்டில் விழுந்த ஒருவர் மீது லாரி ஏறி, இறங்கியதில் அவர் பலியானார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில், உயிரிழந்தது தேனி, உத்தமபாளையம், பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முத்துபாலாஜி, 19 மற்றும் காயமடைந்தவர் குன்னுார் எஸ்.எம். நகரை சேர்ந்த சூர்யா, 19 எனத் தெரிந்தது. இருவரும் கல்லூரி மாணவர்கள்.
இதேபோல் அக்., 9 அன்று காலை புட்டுவிக்கி ரோட்டில் சென்ற பள்ளி பஸ், சுண்டக்காமுத்தூர் -- உக்கடம் ரோடு சந்திப்பில், பைக் மீது மோதியது. பைக்கில் சென்ற உதயகுமார், 43 பலியானார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
