ADDED : மே 24, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜோசப், போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு சுண்ணாம்பு காளவாய் பகுதியில் ரோந்து சென்றார்.
சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை நிறுத்தி விசாரித்தபோது, தெற்கு உக்கடம், அன்பு நகர் மூன்றாவது வீதியை சேர்ந்த அப்பாஸ், 36 என்பதும், விற்பனைக்காக இரண்டு கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.
கஞ்சாவுடன் போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.