ADDED : பிப் 07, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி மயானம் அருகே ஆழியாறு போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அங்கு, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அங்கலகுறிச்சியை சேர்ந்த மாசாணிமுத்து என்கிற சின்னதம்பி,30, ஆனந்தராஜ்,31, ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.