தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது


ADDED : நவ 19, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில் அத்துமீறி நுழைந்து, பாதுகாவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வால்பாறை அடுத்துள்ள கெஜமுடி எஸ்டேட்டை சேர்ந்தவர் கார்த்திக்,37. காஞ்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தமிழிசைவேந்தன்,31. இவர்கள் இருவரும், நேற்று (நவ.,18) இரவு, 9:30 மணிக்கு அரசு போக்குவரத்துக்கழக டெப்போவிற்குள் சென்று, அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் சாமியப்பன், மேலாளரை பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலாளர் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டார், அதனால் இப்போது அவரை பார்க்க முடியாது என பாதுகாவலர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதுகாவலர் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக், தமிழிசைவேந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us