/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்
/
துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்
ADDED : செப் 01, 2025 07:22 AM
சூலுார் : சூலுார் அருகே துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சூலுார் எஸ்.வி.எல்., நகரில் மளிகை கடை நடத்தி வரும் பெண்ணிடம், இரு நாட்களுக்கு முன், 4 சவரன் நகை பறித்து இரு வாலிபர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து, சூலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கேமரா பதிவை கொண்டு, இரு நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த ராஜசேகரன், பீஹாரைச் சேர்ந்த விஜயகுமார் சோனி என்பதும், ராசிபாளையத்தில் தங்கி கட்டட வேலைக்கு சென்றதும் தெரிந்தது.
அவர்களின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு கை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.