/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி
/
அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி
ADDED : நவ 09, 2025 01:03 AM

திருப்பூர்: தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி உட்பட, இருவர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சுல்தானிய பள்ளி வாசல் வீதியை சேர்ந்தவர் பரூக், 37. இவரின் உறவினர் திருமணம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்க வந்த உறவினர்கள், மதியம் செல்லம்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, திடீரென ஆற்றில், பரூக்கின் உறவினர் முகமது ஹசன், 32, இவரது அண்ணன் மகள் ரமலான் பேஹம், 13, ஆகியோர் நீரில் மூழ்கினர்.
இதனை கவனித்த மற்றவர்கள், இருவரையும் காப்பாற்ற போராடினர். இருப்பினும், முடியவில்லை. தகவலறிந்த தாராபுரம் போலீசார், உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர் .
தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடி, இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
வழியிலேயே, இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

