/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
52 கி.மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
/
52 கி.மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
52 கி.மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
52 கி.மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
ADDED : நவ 09, 2025 01:01 AM

கோவை: கோயம்புத்துார் பாய்ஸ்டிரஸ் ரன்னர்ஸ் கிளப்பை சேர்ந்த, 44 வீரர்கள், மூன்று 'சைக்கிளிஸ்ட்' என, 47 பேர், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஊட்டி சேரிங் கிராஸ் வரை, நேற்று தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காலை, 6:45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கிய ஓட்டமானது, குன்னுார் வழியாக ஊட்டி அடைந்தது.
மொத்தம், 52 கி.மீ., துாரத்தை ஏழு மணி நேரம், 10 நிமிடங்களில் நான்கு பேர் முதலிலும், தொடர்ந்து, 11 மணி நேரம், 30 நிமிடங்களில் மற்ற வீரர், வீராங்கனைகளும் ஊட்டியை அடைந்தனர். இதில், கீர்த்தி பிரியா(35), ஆர்த்தி(35), தரணி பிரியா(22) ஆகிய மூன்று வீராங்கனைகளும் தொடர் ஓட்டத்தை முடித்து, 'சபாஷ்' பெற்றுள்ளனர்.
தொடர் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று பாராட்டி ஊக்குவிக்கப்பட்டனர். அப்போது, ஒவ்வொருவரும் தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். ரன்னர்ஸ் கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் வேலாயுதம், பொருளாளர் வேதநாயகம் ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
அப்போது, ரன்னர்ஸ் கிளப் தலைவர் ரமேஷ் பேசுகையில்,''ஒரு கிளப்பை சேர்ந்தவர்கள் முதல் முறையாக தொடர் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது; பெருமைக்குரியது. 52 கி.மீ., தொடர் ஓட்டம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஓட்டத்துக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். சாதாரண 'ரன்னர்' ஆக இருந்தவர்கள், இன்று அதிதீவிர 'ரன்னர்' ஆக உருவெடுத்துள்ளனர்,'' என்றார்.

