/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு வேறு விபத்துகளில் இருவர் பலி
/
இரு வேறு விபத்துகளில் இருவர் பலி
ADDED : ஏப் 01, 2025 10:46 PM
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே நடந்த இரு விபத்துகளில், இருவர் இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு, பொன்னாயூர் அருகே கனரக வாகனம், சரக்கு வாகனத்தை முந்தி சென்றது. அதில் கனரக வாகனம் மோதி சரக்கு வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி டிரைவர்கள் காளிமுத்து,41, சந்தோஷ்,31 ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, கேரளா மாநிலத்தில் இருந்து அடுத்தடுத்து வந்த நான்கு இருசக்கர வாகனங்கள், கனரக வாகனத்தில் மோதி நின்றது. அதில், கேரளா மாநிலத்தை முகமது அஸ்லாம்,22, மன்னார்காடு பகுதியை சேர்ந்த அப்சல்,22, மலப்புரத்தை சேர்ந்த ரியாஸர்,22, சியாஸ்,17 ஆகியோரும், மற்றும் இரு பைக்குகளில் வந்த பொள்ளாச்சி நடுப்புணியை சேர்ந்த கார்த்தி,33, சாலமன்,19, ரீபன்,18, அங்குராஜ்,17 ஆகியோரும் காயமடைந்தனர்.
காயமடைந்த எட்டு பேரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அதில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாலமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன்,70. இவர், கஞ்சம்பட்டியை சேர்ந்த சிவக்குமாரின் மாமியார் லட்சுமி,50, என்பவரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில், வால்பாறை ரோட்டில் சென்றார்.
சமத்துார் மணல்மேடு அருகே, அவருக்கு முன்பு வாகனத்தில் சென்ற சோமந்துறைசித்துாரை சேர்ந்த சுரேஷ்,45, அவரது மனைவி ஈஸ்வரி,33, உடன் வாகனத்தில் சென்றார். அப்போது, அதே ரோட்டில் எதிரே வந்த பொள்ளாச்சியை சேர்ந்த முகமது காசிம்,20, என்பவர், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாவும் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை, வலது புறம் இயக்கி, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதினார்.
அதில், லட்சுமி, கண்ணன், சுரேஷ், ஈஸ்வரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், கண்ணன் இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

