/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயி வெட்டி கொலை இருவர் சுற்றிவளைப்பு
/
விவசாயி வெட்டி கொலை இருவர் சுற்றிவளைப்பு
ADDED : ஆக 16, 2025 02:22 AM

நெகமம்:பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையால் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நெகமம், ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துக்குமார், 47. தாய் வள்ளியம்மாளுடன் வசித்தார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள வீட்டில், ஆனைமலையை சேர்ந்த வடிவேல், 40, நவநீதகிருஷ்ணன், 38, ஆகியோர் ஓராண்டாக தங்கி, கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
முத்துக்குமாரிடமிருந்து, வடிவேல், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பணம் வாங்கியுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கலில் மூவரிடையே பிரச்னை ஏற்பட்டதால், வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். இருவரும் வீட்டை காலி செய்துள்ளனர்.
நேற்று காலை இருவரும் தோப்புக்கு வந்து முத்துக்குமாரிடம் தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால், முத்துக்குமாரை வெட்டி கொலை செய்தனர். வடிவேல், நவநீதகிருஷ்ணன் இருவரையும், நெகமம் போலீசார் கைது செய்தனர்.