/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணல் திருடிய இருவர் கைது லாரி, பொக்லைன் பறிமுதல்
/
மணல் திருடிய இருவர் கைது லாரி, பொக்லைன் பறிமுதல்
ADDED : பிப் 16, 2025 10:45 PM
நெகமம், ;நெகமம், காட்டம்பட்டியில், மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரமேஷ், 50, என்பவருக்கு சொந்தமான விவசாய பகுதியில், கடந்த வாரம் மணல் திருடப்பட்டிருந்தை உறுதி செய்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து ரமேஷ் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இதைத்தொடர்ந்து, மணல் திருட்டில் ஈடுபட்ட காட்டம்பட்டிபுதுாரை சேர்ந்த ஜெயபிரகாஷ், 37, மற்றும் வெள்ளேகவுண்டன்புதுாரை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ், 22, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், மணல் தோண்ட பயன்படுத்திய ஒரு பொக்லைன் இயந்திரம், இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.