/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாம் சுற்றில் 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
/
இரண்டாம் சுற்றில் 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
இரண்டாம் சுற்றில் 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
இரண்டாம் சுற்றில் 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
ADDED : பிப் 05, 2026 05:14 AM

கோவை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான 'பிரீமியர் லீக் கிரிக்கெட்' போட்டி, கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த டி-20 போட்டியில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று இரண்டாம் சுற்று போட்டிகள் நடந்தன.
ஐந்து விக்கெட் அவுட் எஸ்.என்.எம்.வி., கல்லு ாரி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் எஸ்.என்.எம்.வி., கல்லுாரியும், எஸ்.டி.சி., கல்லுாரியும் மோதின. எஸ்.டி.சி. அணியினர் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்தனர். எஸ்.என்.எம்.வி., அணியினர் 17.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தனர். நான்கு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய எஸ்.என்.எம்.வி., வீரர் அசோக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடர்ந்து, பி.எஸ்.ஜி., கலை கல்லுாரியும், ரத்தினம் கல்லுாரியும் மோதின. பி.எஸ்.ஜி., அணியினர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தனர். ரத்தினம் அணியினர் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 53 ரன் எடுத்தனர். 48 ரன் எடுத்த பி.எஸ்.ஜி., வீரர் சித்தார்திற்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது.
'சதம்' அதிரடி ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லுாரியும், சி.எம்.எஸ்., கலை கல்லுாரியும் மோதின. சி.எம்.எஸ்., அணியினர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தனர். கிருஷ்ணா அணியினரோ 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்தனர். 63 ரன்களுடன், 4 ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சி.எம்.எஸ்., வீரர் பிரமோத்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை கல்லுாரியும் மோதின. பேட்டிங் செய்த வி.எல்.பி., அணியினர் 20 ஓவரில் இரு விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தனர். கிருஷ்ணா அணியினர் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்தனர். 100 ரன் எடுத்த வி.எல்.பி., வீரர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சங்கரா கல்லுாரி மைதானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லுாரியும், குமரகுரு இன்ஜி., கல்லுாரியும் மோதின. ராமகிருஷ்ணா அணியினர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தனர். குமரகுரு அணியினரோ 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன் எடுத்தனர். 60 ரன் எடுத்த ராமகிருஷ்ணா வீரர் கிஷோருக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது.
ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரியில் கே.பி.ஆர். கலை கல்லுாரியும், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும் மோதின.
கே.பி.ஆர். அணியினர் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 237 ரன் எடுத்தனர். சக்தி அணியினரோ 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்தனர். 104 ரன் அடித்த கே.பி.ஆர். வீரர் அருண்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப் பட்டது.
தொடர்ந்து, மாருதி கல்லுாரி அணியும், என்.ஜி.எம்., கல்லுாரியும் மோதின. மாருதி கல்லுாரி அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன் எடுத்தனர். என்.ஜி.எம்., அணியினர் 17.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்தனர். 4 ஓவரில் 5 விக்கெட் எடுத்த மாருதி வீரர் லோகுவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இன்று காலிறுதி போட்டிகள் நடக்கின்றன.

