sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கோ-கோ' போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்

/

'கோ-கோ' போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்

'கோ-கோ' போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்

'கோ-கோ' போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்


ADDED : நவ 14, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எம்.டி.என்., பியூச்சர் பள்ளியும், மாணவியருக்கான போட்டியில் சுகுணா பிப் பள்ளியும் 'சாம்பியன்ஷிப்' வென்றன.

கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் வெல்பேர் அசோசியேசன் மற்றும் மூன்று ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாணவ, மாணவியருக்கான கோ-கோ போட்டிகள், சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளியில் இரு நாட்கள் நடந்தது.

இதில், 24 பள்ளிகளை சேர்ந்த, 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவுகளில் தலா, 10 அணிகள் பங்கேற்றன. பல்வேறு போட்டிகளை அடுத்து ஆண்களுக்கான முதல் அரையிறுதியில், டி.கே.எஸ்., பள்ளி அணி, 15-7 என்ற புள்ளி கணக்கில் சி.ஆர்.ஆர்., பள்ளி அணியை வென்றது.

இரண்டாம் அரையிறுதியில், சூலுார், எம்.டி.என்., பியூச்சர் பள்ளி அணி, 12-4 என்ற புள்ளி கணக்கில் டி.என்.ஜி.ஆர்., அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில், எம்.டி.என்., பியூச்சர் பள்ளி, 15-7 என்ற புள்ளி கணக்கில் டி.கே.எஸ்., பள்ளி அணியை வீழ்த்தி 'சாம்பியன்ஷிப்' பெற்றது.

மாணவியருக்கான இறுதிப்போட்டியில், சுகுணா பிப் பள்ளி அணி, 17-14 என்ற புள்ளி கணக்கில், ஆதித்யா பள்ளி அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us