/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் சிக்கிய பள்ளி பஸ் மாணவர்கள் இருவர் காயம்
/
விபத்தில் சிக்கிய பள்ளி பஸ் மாணவர்கள் இருவர் காயம்
விபத்தில் சிக்கிய பள்ளி பஸ் மாணவர்கள் இருவர் காயம்
விபத்தில் சிக்கிய பள்ளி பஸ் மாணவர்கள் இருவர் காயம்
ADDED : அக் 22, 2025 11:41 PM

கருமத்தம்பட்டி: கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பஸ், சாலை தடுப்பில் மோதி நின்றது. இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர்களை ஏற்றி கொண்டு, தனியார் பள்ளி பஸ், அவிநாசி ரோட்டில் நேற்று காலை வந்தது. சர்வீஸ் ரோட்டுக்கு பஸ்சை திருப்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டின் பக்கவாட்டில் இருந்த சாலை தடுப்பில் மோதி நின்றது.
இதில், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் வேறு பஸ்சில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.