/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லிப்ட் கேட்பது போல் நடித்து போன் பறிப்பு :வாலிபர்கள் இருவர் கைது
/
லிப்ட் கேட்பது போல் நடித்து போன் பறிப்பு :வாலிபர்கள் இருவர் கைது
லிப்ட் கேட்பது போல் நடித்து போன் பறிப்பு :வாலிபர்கள் இருவர் கைது
லிப்ட் கேட்பது போல் நடித்து போன் பறிப்பு :வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஜன 22, 2024 12:15 AM
கோவை;லிப்ட் கேட்பது போல் நடித்து போன் பறித்த வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 26, நடன பயிற்சி பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த, 19ம் தேதி காந்திபுரம் பாரதியார் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர், அவரை மறித்து லிப்ட் கேட்டார். மாதேஸ்வரன் அந்த வாலிரை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றார். சிறிது துாரம் சென்றதும் அந்த வாலிபர் மாதேஸ்வரனிடம் அவசரமாக தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என மாதேஸ்வரனின் மொபைல் போனை கேட்டார்.
மாதேஸ்வரனும் பைக்கை நிறுத்தி போனை அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது ஆட்டோ ஒன்று அங்கே வந்தது. அதில் இருந்த ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரனிடம் பேச்சு கொடுத்து அவரிடம் இருந்த மற்றொரு மொபைல் போனை பார்த்துவிட்டு தருவதாக வாங்கினார்.
பின் மாதேஸ்வரன் தனது பைக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்த சென்றார். அப்போது ஏற்கனவே மாதேஸ்வரனிடம் போனை வாங்கி பேசிக் கொண்டிருந்த நபரும், ஆட்டோவில் வந்த நபரும் ஒன்றாக தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரன் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மொபைல் போன்களை திருடி சென்ற இரண்டு பேரையும் தேடி வந்தனர். அதில் நீலாம்பூரை சேர்ந்த இஸ்மாயில், 35 மற்றும் தட்சிணாமூர்த்தி, 36 ஆகியோர் போனை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.