ADDED : மார் 05, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், சில மாதங்களாக தொடர் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட 2,183 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
உரிய அனுமதி பெற்று, தேவம்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டப்பட்டு குட்கா மூட்டைகள் கொட்டி அழிக்கப்பட்டன.
கோவில்பாளையம் எஸ்.ஐ. வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் மகாராஜன், ஊராட்சி செயலர் அஜித் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
