/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,வில் இரண்டு ஒன்றியங்கள் மூன்றாக பிரிப்பு
/
தி.மு.க.,வில் இரண்டு ஒன்றியங்கள் மூன்றாக பிரிப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; தி.மு.க.,வில் சூலுார் தெற்கு ஒன்றியத்துக்கு மன்னவனும், சூலுார் வடக்கு ஒன்றியத்துக்கு அனபரசும் ஒன்றிய செயலாளர்களாக இருந்தனர்.
இந்நிலையில், நிர்வாக வசதிக்காக, இரண்டாக இருந்த சூலுார் ஒன்றிய கட்சி நிர்வாகத்தை, மூன்றாக பிரித்த தலைமை கழகம், புதிய பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி, சூலுார் மேற்கு ஒன்றியம் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. சூலுார் வடக்கு ஒன்றியத்துக்கு, சிபி செந்தில்குமார் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு ஒன்றியத்துக்கு மன்னவன், மேற்கு ஒன்றியத்துக்கு, அன்பரசு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.