/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு: பெண்கள் இருவர் கைது
/
மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு: பெண்கள் இருவர் கைது
மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு: பெண்கள் இருவர் கைது
மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு: பெண்கள் இருவர் கைது
ADDED : பிப் 04, 2025 07:47 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணிடம் 4.5 சவரன் நகையை பறித்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையை சேர்ந்த ஆறுச்சாமியின் மனைவி சாந்தி, 56, கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் லோகநாயகி, 43.
அதே பகுதியை சேர்ந்த லோகநாயகியின் தோழி, மகேஸ்வரி, 40. இவர்கள் இருவரும் சேர்ந்து, மகளிர் சுய உதவி குழு வாயிலாக பணம் பெற்று தருவதாக சாந்தியிடம் கூறியுள்ளனர்.
அதை நம்பி, கடந்த, 28ம் தேதி அவர்களுடன் சாந்தி சென்றார். மூவரும், சுங்கம் அருகேயுள்ள பேக்கரிக்கு சென்று குளிர்பானம் பருகியுள்ளனர். அப்போது, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரையை, சாந்திக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின், ஆட்டோவில் உடுமலை நோக்கி சென்றுள்ளனர். உடுமலை அருகே, சாமராயபட்டி காளியம்மன் கோவில் அருகே சென்றதும், ஆட்டோவில் இருந்து இறங்கி, மயக்க நிலையில் இருந்த சாந்தியை கிணற்று மேட்டில் உட்கார வைத்துள்ளனர்.
அங்கு, யாரும் இல்லாத நேரத்தில் சாந்தி அணிந்திருந்த, 4.5 சவரன் நகைகளை கழற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பினர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த சாந்தியை, அப்பகுதி மக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடன் வந்த இருவரும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகையை திருடி சென்றதை உணர்ந்த சாந்தி, கடந்த, 31ம் தேதி ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி, இரு பெண்களையும் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள லோகநாயகி, கடந்த, 2018ம் ஆண்டு கோட்டூர் பகுதியில் சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பரிந்துரை இன்றி, மயக்க மருந்து விற்பனை செய்ய மருந்துக்கடை, மயக்க நிலையில் இருந்த வரை ஆட்டோவில் அழைத்து சென்ற டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.