ADDED : மார் 02, 2026 06:23 AM

கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், 'உதயம்-26' என்ற கலை மற்றும் தொழில்நுட்பத் திருவிழா, கோலாகலமாக நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூன், நடிகை மாளவிகா மற்றும் சமூக ஊடகப் பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர், மாணவர்களிடையே உரையாற்றி மகிழ்ந்தனர். கலை, தொழில்நுட்பம் என பல்வேறு திறன் போட்டிகள் நடந்தன. இவ்விழாவில் 150க்கு மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு மேற்பட்டமாணவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்றனர்.
போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது. கல்லுாரி நிறுவனர் பழனிசாமி, பைந்தமிழ்பாரி, துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர்ராமசாமி, டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
