/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு புகுந்து திருடிய உடுமலை வாலிபர் கைது
/
வீடு புகுந்து திருடிய உடுமலை வாலிபர் கைது
ADDED : அக் 25, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கோமங்கலம்புதுாரை சேர்ந்தவர் வேலுமணி,65. இவர், கடந்த, 22ம் தேதி தோட்டத்துக்கு சென்று வீடு திரும்பிய போது, வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும், 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து, கோமங்கலம்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உடுமலையை சேர்ந்த சரவணன்,39, திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5.5 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.