sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிடுக்கிப்பிடி போடுகிறது யு.ஜி.டி.,!

/

கிடுக்கிப்பிடி போடுகிறது யு.ஜி.டி.,!

கிடுக்கிப்பிடி போடுகிறது யு.ஜி.டி.,!

கிடுக்கிப்பிடி போடுகிறது யு.ஜி.டி.,!


ADDED : ஜூலை 27, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ச ட்டபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கி விட்டாலே, மக்கள் நலனில் அக்கறை இருப்பதாக காண்பித்துக் கொள்ளும் ஆட்சியாளர்கள், கடந்த நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பது தான், நம்பி ஓட்டுப்போட்ட மக்களின் கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு விடை காண, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளிலும், 'விசிட்' செய்ய உள்ளோம். முதல் விசிட், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 15வது வார்டு.

இந்த வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் பகுதியில், கணேஷ் நகர், காந்தி நகர், பாலசுப்ரமணியம் நகர், விவேக் நகர், கே.கே.நகர், கிரீன் சிட்டி, என்.பி.சி.நகர், அன்னை வில்லா, அன்னை கார்டன் எக்ஸ்டன்சன், கணபதி கார்டன் என அனைத்து இடங்களையும், ஒரு 'ரவுண்டு' வந்தோம்.

நாம் சந்தித்த மக்கள், தாங்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளை கொட்டினாலும், 'மழை காலத்தில், சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து கொள்கிறது, குப்பை தேங்கி விடுகிறது...' ஆகியவையே, பிரதானமாக முன் நிற்கின்றன.

'தடையின்றி செல்லணும்' கணேஷ் நகர் நான்காம் வீதியை சேர்ந்த சுப்பையன்:

எங்கள் வார்டில், மழை காலங்களில் சாக்கடை கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுத்து பெரும்பாலான வீடுகளுக்குள் புகுந்துவிடும். இதுதான் முக்கிய பிரச்னை. காரணம், ஜி.என்.மில்ஸ் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை, 'ஸ்லாப்' கொண்டு மூடப்பட்டுள்ள சாக்கடை பாலம், 10 ஆண்டுக்கும் மேலாக துார்வாரப்படவில்லை.

இதனால் மழை காலங்களில், நகர் முழுவதும் தண்ணீரும், கழிவு நீரும் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாலத்தில் உள்ள அடைப்பை அகற்றி, சங்கனுார் வாய்க்காலுக்கு தண்ணீர் தடையின்றி சென்றால் மட்டுமே, எங்கள் வார்டுக்கு விமோசனம் கிடைக்கும்.

'சாக்கடை அடைப்பு' குடியிருப்போர் சங்கத்தின் தலைவர், கணேசன்:

இந்த வார்டில் குப்பை, உடனுக்குடன் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுவாக இங்குள்ள சாக்கடையையும் துாய்மை செய்வதில்லை. அப்படியே, வேலை நடந்தாலும், மேலே எடுக்கப்பட்ட கழிவுகளை நாள் கணக்கில் அகற்றாததால், மீண்டும் அதே மண் சாக்கடைக்குள் விழுந்து அடைத்துக்கொள்கிறது. இது நாளடைவில் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுக்க காரணமாகிறது.

'விழிப்புணர்வு வேண்டும்' கணேஷ் நகர் இரண்டாவது வீதியை சேர்ந்த இளஞ்செழியன்:

பொது மக்களி டம் விழிப்புணர்வு இல்லை. சாக்கடைக்குள் குப்பை வீசி செல்கின்றனர். அரசை மட்டுமே குறை கூறாமல், மக்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாங்களும் இங்குள்ளவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வெளிப்பகுதியில் இருந்து வருபவர்கள்தான் அத்துமீறுகின்றனர்.

'திணறுகிறார்கள்' இங்கு எல்லா பக்கமும் ரோடு மோசமாகத்தான் இருக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டுகிறார்கள். ஆனால், உடனடியாக சரி செய்வதில்லை. மழை காலத்தில் மண் கீழே இறங்கி வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது. அடிக்கடி விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர். கொசு மருந்தும் அடிப்பதில்லை. கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகிறோம். -மஹாலட்சுமி இல்லத்தரசி

'யு.ஜி.டி.,பணி டிராஜடி' எங்கள் வீடு எதிரே பாதாள சாக்கடை(யு.ஜி.டி.,) பணிக்காக குழி தோண்டியபோது சாக்கடை குழாயை உடைத்து, மண்ணை போட்டு மூடிவிட்டனர். இதனால், சாக்கடை தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுக்கிறது. இரு நாட்களில் மட்டும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். அருகே பள்ளியும் இருப்பதால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். -பாலசுப்ரமணியம் விவேக் நகர்.

நடவடிக்கை இல்லை நாய் தொல்லை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரவில் நடமாட முடியவில்லை. வீதிகளில் குப்பை தேக்கம் என்பது பிரதான பிரச்னை. இவை சாக்கடையில் கலந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. கவுன்சிலரிடம் தெரிவித்தால் அவர் 'பார்க்கிறேன்' என்கிறார். ஆனால், நடவடிக்கை இல்லை. -கிருஷ்ணவேணி இல்லத்தரசி

'யு.ஜி.டி., பணி டிராஜடி' எங்கள் வீடு எதிரே பாதாள சாக்கடை(யு.ஜி.டி.,) பணிக்காக குழி தோண்டியபோது சாக்கடை குழாயை உடைத்து, மண்ணை போட்டு மூடிவிட்டனர். இதனால், சாக்கடை தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுக்கிறது. இரு நாட்களில் மட்டும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். அருகே பள்ளியும் இருப்பதால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். -பாலசுப்ரமணியம் விவேக் நகர்.

'திணறுகிறார்கள்' இங்கு எல்லா பக்கமும் ரோடு மோசமாகத்தான் இருக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டுகிறார்கள். ஆனால், உடனடியாக சரி செய்வதில்லை. மழை காலத்தில் மண் கீழே இறங்கி வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது. அடிக்கடி விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர். கொசு மருந்தும் அடிப்பதில்லை. கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகிறோம். -மஹாலட்சுமி இல்லத்தரசி

பெயருக்குதான் 'பூங்கா'

கணேஷ் நகர் குடியிருப்போர் நலச்சங்க துணை தலைவர், கோபால்: பாலசுப்ரமணியம் நகரில், 30 சென்ட் மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இங்கு விளையாட்டு உபகரணங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. அதுவும், மோசமான நிலையில், காட்சி பொருளாக நிற்கின்றன. சுற்றிலும் இருந்த கம்பி வேலி பாதியை காணவில்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு இப்பூங்கா இடமாகிறது. இதை பராமரித்து குழந்தைகள், பெரியோர் பயன்பெறும் வகையில் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



கவுன்சிலர்

சொல்வதென்ன?

பொதுமக்கள் தெரிவித்த புகார்களை, வார்டு கவுன்சிலர் (காங்.,) சாந்தாமணியின் முன்வைத்தோம். அவர் கூறியதாவது: வார்டுகளில் இருந்து கழிவு நீரை, வெளியேற்ற மேட்டுப்பாளையம் ரோட்டை ஒட்டிய சாக்கடை மீதுபோடப்பட்ட, ஸ்லாப்களை எடுத்துவிட்டு துார்வார வேண்டியுள்ளது. இதற்கென, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார். தினமும் துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றி வருகின்றனர். துாய்மை பணியாளர் போராட்ட சமயத்தில்தான், குப்பை தேக்கம் காணப்பட்டது. தவிர, குப்பை எடுக்கும் வாகனங்கள் ஏதேனும் பழுதடைந்தாலும், அவற்றை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. வார்டுக்கென்று, 'வாட்ஸ்அப் குரூப்' உள்ளது. அதில், பகிரப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொசு மருந்தும் தெளிக்கப்படுகிறது. துாய்மை பணியாளர்கள், 'ரூட் சார்ட்' போட்டு குப்பை சேகரித்து வருகின்றனர். பாலசுப்ரமணியம் நகரில் உள்ள, மாநகராட்சி பூங்காவை இந்த வாரத்தில் சுத்தம் செய்வதாக, ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். பூங்காவுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை, மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளேன். யு.ஜி.டி., பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளன. விவேக் நகரில் உடைந்துள்ள, சாக்கடை குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யு.ஜி.டி., பணிகளால் மழை காலத்தில் சேறும், சகதியுமாக சாலை மாறிவிடுகிறது. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us