தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீபாவளிக்கு உச்சகட்ட 'பர்ச்சேஸ்!'

தீபாவளிக்கு உச்சகட்ட 'பர்ச்சேஸ்!'

தீபாவளிக்கு உச்சகட்ட 'பர்ச்சேஸ்!'


ADDED : அக் 28, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி பண்டிகை ஓரிரு நாட்களில் கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் இறுதி கட்ட பர்ச்சேஸில் பிசியாகி உள்ளனர்.

வரும், 31ம் தேதி தீபாவளி என்பதால், கோவையில் பல்வேறு பகுதிகளிலும் 'பர்ச்சேஸ்' ஜூரம் பற்றிக் கொண்டது. அதுவும், பண்டிகைக்கு முன் வரும் கடைசி விடுமுறை நாள் என்பதால், நேற்று கடை வீதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஜவுளி, பட்டாசு மற்றும் இனிப்பு விற்பனையகங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

கோவையின் பிரதான பகுதிகளான டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், கடைகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் திணறின.

பொதுமக்களின் நிலைக்கு ஏற்றவாறு, பல்வேறு நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளும் வாரி வழங்கியுள்ளன. இதுதவிர, பிளாட்பாரங்களில் ஏற்பட்டுள்ள புதிய கடைகளும், சலுகை விலையில், ஆடைகள், ஆபரணங்களை விற்பனைக்கு குவித்திருந்தன.

குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனையும் அதிகளவில் நடந்தது. இத்துடன் பர்னிச்சர், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளிலும், எலக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் பெருங்கூட்டம் காணப்பட்டது.

ஆடைகள் மட்டுமல்ல, ஆடைகளுக்கு மேட்ச்சான ஷூ, செருப்பு, காதணிகள், மாலைகள், வளையல்கள் வாங்கவும், அதிக மக்கள் திரண்டனர்.

பெண்கள் டாப்ஸ், நைட்டி உள்ளிட்டவற்றை தேடித் தேடி வாங்கினர். பெரிய பிராண்டு ஆடைகளை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாய் தெரிந்தார், 'மூனு சட்டை ரூ.500க்கு' என, கூவி, கூவி விற்பனை செய்த அந்த விற்பனையாளர்.

வழக்கமாக கூட்டம் நிரம்பி வழியும் நஞ்சப்பா ரோடு 'சண்டே மார்க்கெட்', நேற்று மக்கள் கூட்டத்தால் திணறியது. அனைத்து தரப்பு மக்களும் ஆடை வாங்கும் அளவுக்கு, குறைந்த விலையில் ஆடைகள் விற்பதுதான், இந்த மார்க்கெட்டின் சிறப்பு.

முக்கிய வீதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த, மாநகர போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். ஒலிபெருக்கிகள் வாயிலாக உடமைகள், குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us