UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சாலையோர வியாபாரிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் குடை வழங்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால், பெரும்பாலான சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் சர்வீஸ் ரோட்டோரம் பழக்கடை, செருப்பு கடை, பானை கடை மற்றும் பல்வேறு தொழில்கள் செய்யும், 20 வியாபாரிகளுக்கு பெரிய குடை வழங்கப்பட்டது.
விடுபட்ட வியாபாரிகளுக்கு வரும் நாட்களில் குடைகள் வழங்கப்படும் என, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
