/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோப்பிரிபாளையத்தில் ஐ.நா., சபை பிரதிநிதி ஆய்வு
/
மோப்பிரிபாளையத்தில் ஐ.நா., சபை பிரதிநிதி ஆய்வு
ADDED : ஜன 29, 2024 11:23 PM
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்துள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை, ஐ.நா., சபையின் தன்னார்வ அமைப்புகளுக்கான பிரதிநிதியான அமெரிக்காவை சேர்ந்த பிர்கன் அன்வர் பார்வையிட்டார். அவருடன் ஐஜென் அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ் பங்கேற்றார்.
கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள், தானியங்கி குடிநீர் வினியோக முறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம், தனிநபர் இல்ல கழிப்பிடம், கட்டணமில்லா இ- சேவை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பேரூராட்சி தலைவர் சசிக்குமார் விளக்கினார். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
பணிகளை பாராட்டி பேசிய பிர்கன் அன்வர், எதிர்காலத்தில், ஐ.நா., சபை தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், ஐஜென் நிறுவனத்தின் சார்பிலும் பேரூராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும், என்றார்.