/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்துள்ள ரோட்டில் பயணிக்க முடியாமல் அவதி
/
புதர் சூழ்ந்துள்ள ரோட்டில் பயணிக்க முடியாமல் அவதி
ADDED : அக் 21, 2024 06:21 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, சிங்காரம்பாளையம் ரோடு சேதமடைந்து, புதர் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் வழியாக, சிங்காரம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள வளைவு பகுதி சேதமடைந்துள்ளது. சரி செய்யப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், இப்பகுதியில் செல்லும் போது தடுமாறுகின்றனர்.
குறிப்பாக, மழை காலத்தில் இந்த வளைவு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால், பைக் ஓட்டுனர்கள் மாற்று பாதையில் செல்கின்றனர். கனரக வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால், சிறிய அளவில் இருந்த சேதம், தற்போது பெரிதாகியுள்ளது. மேலும், பகவதிபாளையத்தில் இருந்து சிங்கராம்பாளையம் செல்லும் ரோட்டின் இரு பகுதியிலும், அதிக அளவு செடிகள் படர்ந்துள்ளதால் ரோடு குறுகலாக உள்ளது. கார் போன்ற வாகனங்கள் சென்றாலும் செடிகள் உரசுகிறது. பைக்கில் செல்லும் போது பூச்சி தொந்தரவு இருப்பதால், இவ்வழியில் செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர். இரவு நேரத்தில் பயணிப்பதில், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே, ரோடு சேதமடைந்த வளைவு பகுதி மற்றும் ரோட்டில் செடிகள் நிறைந்த பகுதியை வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி விரைவில் சரி செய்ய வேண்டும்.

