/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு; இருளில் மூழ்கியது வால்பாறை
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு; இருளில் மூழ்கியது வால்பாறை
அறிவிக்கப்படாத மின் வெட்டு; இருளில் மூழ்கியது வால்பாறை
அறிவிக்கப்படாத மின் வெட்டு; இருளில் மூழ்கியது வால்பாறை
ADDED : ஆக 04, 2025 08:01 PM
வால்பாறை; வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு தேவையான மின்சாரம், அய்யர்பாடி துணை மின் நிலையத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, 9:30 மணி முதல் நேற்று காலை, 10:30 மணி வரை வால்பாறை நகர் மற்றும் நடுமலை, பச்சமலை ஆகிய எஸ்டேட் பகுதியிலும் திடீர் மின் தடை ஏற்பட்டது.
நேற்று காலை மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் அவதிக்குள்ளாகினர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ''வால்பாறையில் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், நடுமலை எஸ்டேட் வனப்பகுதியில் மின்கம்பம் மழையில் சாய்ந்தது. இதனால் தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், நள்ளிரவில் சரி செய்ய முடியவில்லை. அதிகாலையில் மின் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டு, மின் கம்பத்தை சரி செய்தவுடன், மின் இணைப்பு வழங்கப்பட்டது' என்றனர்.