/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
/
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
ADDED : ஜூன் 19, 2025 07:55 AM
வால்பாறை : வால்பாறையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
பொது மக்கள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கனமழை பெய்யும் நிலையில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பல மணி நேரம் மின்வெட்டு நீடிக்கிறது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் அச்சத்துடன் வசிக்க வேண்டியுள்ளது. எனவே, மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.