/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற மனைப்பிரிவுக்கு காலக்கெடு இன்றி வரன்முறை
/
அனுமதியற்ற மனைப்பிரிவுக்கு காலக்கெடு இன்றி வரன்முறை
அனுமதியற்ற மனைப்பிரிவுக்கு காலக்கெடு இன்றி வரன்முறை
அனுமதியற்ற மனைப்பிரிவுக்கு காலக்கெடு இன்றி வரன்முறை
ADDED : ஜூலை 09, 2025 10:25 PM
கோவை; அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனிமனைகளுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு சமர்ப்பித்து, வரன்முறை செய்து கொள்ளலாம்.
கலெக்டர் அறிக்கை:
தனிமனையாக மக்கள் பயனடையும் வகையில், onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள், www.tcponline.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மலையிடப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை, www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்துக்கு பதிலாக, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.