UPDATED : மே 19, 2026 06:04 PM
ADDED : மே 19, 2026 05:42 PM

அ நிறம் | அளவு
கோவை:கோவை நகரின் மிக முக்கிய போக்குவரத்து மையமான காந்திபுரம் லாலா கார்னர், டவுன்பஸ்ஸ்டாண்ட், காந்திபுரம் மத்திய பஸ்ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் சாலையை கடப்பது பாதசாரிகளுக்கு சவாலாகவும் ஆபத்தாகவும் உள்ளது.
அதிகாலை துவங்கும் போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை தொடர்கிறது. இங்கு இருந்த நடை மேம்பாலம் மக்கள் பயன்பாடு இல்லாததால் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக சுரங்க நடைபாதை அமைக்கவில்லை.
டாக்டர் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் ஸ்டாண்ட் அல்லது மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், கிராஸ்கட் சாலை, சத்தி சாலை ஜி.பி.சிக்னல் ஆகிய பகுதிகளில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
