/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெடு விதிச்சு ஐந்து வாரமாச்சு அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
/
கெடு விதிச்சு ஐந்து வாரமாச்சு அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
கெடு விதிச்சு ஐந்து வாரமாச்சு அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
கெடு விதிச்சு ஐந்து வாரமாச்சு அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 26, 2024 12:53 AM
அன்னுார்;ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நோட்டீஸ் கொடுத்து ஐந்து வாரங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சரவணம்பட்டி முதல் அன்னுார் வழியாக புளியம்பட்டி வரை, இருபுறமும் சாலையை அகலப்படுத்தும் பணி, கடந்த ஒன்றரை ஆண்டாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அன்னுார் நகர் மற்றும் கணேசபுரத்தில் சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அகலப்படுத்தப்பட்ட சாலையை வாகனங்களும், பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்த முடியாதபடி, மீண்டும் தார் சாலையை ஒட்டி ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடைகளில் நீட்டி விடப்பட்ட மேற்கூரைகள், விளம்பரப் பலகைகள், வணிகப் பொருட்கள் என தார் சாலையை ஒட்டி உள்ள மண் பாதையில், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி, தங்களது வாகனங்களை நிறுத்த முடியாதபடி, ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை தார் சாலையில் நிறுத்த வேண்டியுள்ளது. மேலும் அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து, கணேசபுரம் மக்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை தொலைபேசியில் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஐந்து வாரங்களுக்கு முன், ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். நோட்டீஸ் வழங்கி ஐந்து வாரங்களாகியும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவும் இல்லை' என்றனர்.

