ADDED : மார் 04, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
சூலுார்: சுல்தான்பேட்டை அருகே குட்டையிலும், வாய்க்காலிலும் அடையாளம் தெரியாத இரு ஆண் சடலங்கள் மீட்கப்பட்டன.
சுல்தான்பேட்டை அடுத்த செலக்கரச்சல் டாஸ்மாக் கடை எதிரில் உள்ள குட்டையில், அடையாளம் தெரியாத, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, சுல்தான்பேட்டை போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதேபோல், செஞ்சேரிபுதுார் வலசுபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க, ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
