/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பணியாளர்கள் 2,220 பேருக்கு சீருடை
/
மாநகராட்சி பணியாளர்கள் 2,220 பேருக்கு சீருடை
ADDED : ஜன 10, 2024 11:57 PM

கோவை : மாநகராட்சி பணியாளர்கள், 2,220 பேருக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
கோவை மாநகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள், மாநகராட்சி மருந்தகங்கள், மருத்துவமனைகளில் பணிபுரிவோர் என, 2,220 பேர் உள்ளனர்.
இதில், 1,431 ஆண் பணியாளர்களுக்கு காக்கி பேன்ட்ஸ் மற்றும் சர்ட்(ஒரு ஜோடி), தலைப்பாகை, காலணி, 12 சோப்புகள், பெண் பணியாளர்கள், 789 பேருக்கு தலா ஒரு ஜோடி சேலை மற்றும் பிளவுஸ், தலைப்பாகை, காலணி, 12 சோப்புகள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
இத்துடன், மிளிரும் ஜாக்கெட், மழை கோட், கையுறை, முகக்கவசம், கட்ஷூ, கம்பூட்ஸ், பேக், கேப் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களையும், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் கல்பனா நேற்று வழங்கினார்.
துணை மேயர் வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், துணை கமிஷனர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அந்தந்த மண்டலங்களிலும் இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.