/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம்! டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்
/
அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம்! டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்
அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம்! டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்
அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம்! டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 25, 2025 11:31 PM

பொள்ளாச்சி: : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிக்காக புதர் மண்டிய வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கடந்த 2009ம் ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.462 உள்நோயாளிகளும், தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள்ள நான்கு அறுவை சிகிச்சை அரங்குகளில், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், சி.டி.ஸ்கேன், எக்ஸ் - ரே போன்ற உபகரணங்களும் உள்ளன. இந்நிலையில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில், குறைந்த மின் அழுத்த மின்பாதைக்கு மாற்றாக, உயர் அழுத்த மின்பாதை அமைக்க, 2.9 கோடி ரூபாய் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட பாலகோபாலபுரம் வீதியில் உள்ள இடத்தில், புதிதாக ஜெனரேட்டர், உயர் அழுத்த மின்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக தரை தள கட்டடம் கட்டப்பட்டது. புதிதாக டிரான்ஸ்பார்மர் கொண்டு வரப்பட்டது. இப்பணிகள், பொதுப்பணித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
முதல் தளம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதியாக, 33 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நிதி கிடைக்காததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த, நான்கு ஆண்டுகளாக வளாகம், கட்டடம் முழுவதும் புதர்கள் மண்டி பராமரிப்பின்றி கிடந்தது.
கடந்தாண்டு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. தற்போது புதர் அகற்றி, பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை (மின்சாரம்) அதிகாரிகள் கூறுகையில், 'டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தற்போது, அந்த இடம் துாய்மைப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதையடுத்து, புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை ஒரு மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்த பாதை அமைத்தால், தடையில்லா மின்சாரம் கிடைக்கும்,' என்றனர்.

