/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழிவாங்கும் நடவடிக்கைதொழிற்சங்கம் குற்றச்சாட்டு
/
பழிவாங்கும் நடவடிக்கைதொழிற்சங்கம் குற்றச்சாட்டு
ADDED : நவ 09, 2024 11:34 PM

கோவை: 'சங்க நிர்வாகிகள் மீது, பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவது, 'மெமோ' வழங்குவது போன்ற நடவடிக்கைகள், மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன' என, தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கேங்மேன் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் நலனுக்காக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை வைத்தும், கோவை மண்டலத்தில் சரிவர பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால், சங்க நிர்வாகிகள் மீது தனிப்பட்ட முறையில், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
பாதுகாப்பில்லா சூழ்நிலையை கூறினால், அது தவறு எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறை மறைக்கும் செயல். மேலும், துறை ரீதியாக 'மெமோ' கொடுப்பது, விடுப்புகள் கூட வழங்காமல் இருப்பது, மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநில பொது செயலாளர் யுவராஜ், கோவை மண்டல செயலாளர் அருள்குமார் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.