/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய பட்ஜெட்; 'டேக்ட்' கருத்து
/
மத்திய பட்ஜெட்; 'டேக்ட்' கருத்து
ADDED : பிப் 04, 2026 05:01 AM
கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் அறிக்கை:
கடந்த மத்திய பட்ஜெட்டில், குறு சிறு தொழில்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கியதே தொழில்துறைக்கு பயனளிக்கவில்லை.
நடப்பு பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் என்பது போதுமானதாக இல்லை. தொழில்துறையினர் ஜி.டி.பி.,யில் ஒரு சதவீதம் எதிர்பார்த்தோம். ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.
நிறுத்தப்பட்ட 15 சதவீத மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். வெட் கிரைண்டர், கம்ப்ரஷர், ஜாப் ஆர்டர், பம்ப், மோட்டார்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மூலப்பொருள் விலை தீர்மானிக்க விலை நிர்ணய கமிட்டி அமைக்க வேண்டும், சர்பாசி சட்ட நடவடிக்கைக்கு 180 நாள் அவகாசம் என்ற கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. இந்த பட்ஜெட் தொழில்துறைக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

