/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றிய குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் 'பாஸ்'
/
ஒன்றிய குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் 'பாஸ்'
ADDED : டிச 10, 2024 11:32 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலகத்தில், நேற்று நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணைத்தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினகுமார் மற்றும் விஜயகுமார், கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அலுவலக பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியதற்கு தொகை வழங்கவும், ரோடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள்மேற்கொள்ளவும், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய குழு தலைவர் பேசுகையில்,'கடந்த, 5 ஆண்டுகளில் பல சிக்கல்கள் வந்த போதிலும் அதை ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பால் எளிதில் தீர்க்க முடிந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,' என்றார்.