ADDED : ஏப் 16, 2026 11:17 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் சாலையோரம் நின்றவர் பலத்த காயமடைந்து இறந்தார்.
பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமகோபாலன்,54. இவர், வடக்கு ஒன்றிய அலுவலக டிரைவாக பணியாற்றினார். நேற்றுமுன்தினம், வடக்கிப்பாளையம் பிரிவில் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, அங்கு இருந்த மின்கம்பம், இருசக்கர வாகனம் மீது மோதி, பஸ் ஸ்டாப்பில் நின்ற ராமகோபாலன் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த ராமகோபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாலுகா போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வடமாநிலத்துக்கு மாங்காய் லோடு ஏற்ற கோவிந்தாபுரம் செல்வதற்காக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து டிரைவர் ஹக்கீம் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
