/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அளவில் கருத்தரங்கு
/
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அளவில் கருத்தரங்கு
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அளவில் கருத்தரங்கு
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அளவில் கருத்தரங்கு
ADDED : ஜன 12, 2024 10:42 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி 'கேர் டி' அமைப்பு சார்பில், குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒன்றிய அளவிலான கருத்தரங்கம், போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. 'கேர் டி' பணியாளர் மற்றும் பஞ்சாலை பயிற்றுனர் பிரஜா வரவேற்றார். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மோத்திராஜ், கருத்தரங்கின் நோக்கம் குறித்தும், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.
இலவச சட்ட உதவி மைய வக்கீல் மற்றும் சட்ட ஆலோசகர் தாஹிரா, பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள், குழந்தைகளுக்கான பாலியல் சட்டங்கள் குறித்து விளக்கினார்.
கிராமப்புறத்தில் உள்ள வளரிளம் பெண்களுக்கான, தமிழக அரசின் திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை சமூக சுகாதார செவிலியர் சாந்தா தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து, கோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மனோன்மணி; குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலக ஏ.பி.ஓ., குமாரராஜா ஆகியோர் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.